Pages

Tuesday 2 April 2013

சீனா கப்பற்படையில் முதன்முதலில் 20 முஸ்லீம் பெண்கள்

சீனா கப்பற்படையில் முதன்முதலில் 20 முஸ்லீம் பெண்கள் சேர்ப்பு

சீனாவின் ஸின்சியாங்கில் உள்ள உக்யார் என்ற இடத்தில் துர்கிக் பகுதியிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் உக்யார் பகுதியை பிரித்து தங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், அங்கு தீவிரவாதம் தலையெடுத்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உக்யாரை சேர்ந்த 20 முஸ்லிம் பெண்கள், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி முடித்துள்ள இப்பெண்கள் கடற்படை கப்பலில் பயணம் செய்ய தயாராக உள்ளனர்.

இது குறித்து கடற்படையில் சேர்ந்துள்ள முஸ்லிம் பெண்கள் கூறுகையில், கடற்படையில் சேர்ந்து எங்களது தாய்நாட்டுக்காக பாடுபட இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதுவதாக தெரிவித்துள்ளனர். (Via FB)


Home

No comments:

Post a Comment