Pages

Sunday 5 August 2012

சவூதி அரேபியாவின் முதல் ஒலிம்பிக் ஜூடோ வீராங்கனை

1/
 சவூதி அரேபியாவின் முதல் ஒலிம்பிக் ஜூடோ வீராங்கனை : ஹிஜாப் அவிழாமல் அப்படியே இருக்கிறதா என்பதை உறுதி செய்து தோல்வியைச் சந்தித்தார்.

2/
3/
 ஒலிம்பிக் வரலாற்றில் புதிய வரலாறு படைத்து விட்டார் ஒஜ்தன் அலி செராஜ் அப்துல்ரஹீம் ஷெகர்கானி.

சவூதி அரேபியாவின் முதல் ஒலிம்பிக் ஜூடோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற ஷெகர்கானி தான் கலந்து கொண்ட முதல் போட்டியில் 82 விநாடிகளில் தோல்வியைச் சந்தித்தார். ஆனாலும், சவூதி பெண்களுக்கு பெரும் உத்வேகத்தையும், முன்மாதிரியையும் ஏற்படுத்தி விட்டார் ஷெகர்கானி.

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக இரண்டே இரண்டு வீர
ாங்கனைகளை இந்த முறை அனுப்பியிருந்தது சவூதி அரசு. அதுவும் கூட ஏகப்பட்ட இழுபறிகள், கண்டனங்கள், எதிர்ப்புகள், ஆவேசங்களுக்குப் பின்னர் இந்த வீராங்கனைகள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் ஷெகர்கானி. ஜூடோ போட்டியில் பங்கேற்றார் ஷெகர்கானி.

எப்படி ஆண்களுக்கு முன்பு ஒரு பெண் விளையாடலாம் என்ற பெரும் எதிர்ப்புக் குரல்களை ஷெகர்கானி ஆரம்பத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அவரை அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து நெற்றியை முழுமையாக மூடும் வகையிலான தலைக் கவசத் துணியை அணிந்து கொள்ள வேண்டும், உடல் பாகங்கள் எதுவும் வெளியே தெரியக் கூடாது என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார் ஷெகர்கானி.

அதன்படி நேற்று ஷெகர்கானி தனது முதல் போட்டியைச் சந்தித்தார். பியூர்டோரிகாவின் மெலிசா மோஜிகாவை அவர் சந்தித்தார். இந்தப் போட்டியைக் காண பெரும் திரளானோர் கூடியிருந்தனர். ஷெகர்கானியின் தந்தையும்,சர்வதேச ஜூடோ நடுவருமான அலியும் அங்கு வந்திருந்தார்.

தலையில் கருப்புத் துணியால் மூடியபடியும், முழுக்க உடலை மூடியிருந்த ஜூடோ டிரஸ்ஸுடனும், வித்தியாசமான தோற்றத்தில் மோதினார் ஷெகர்கானி. போட்டி தொடங்கியது முதலே மெலிசாவுடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபடவே முயலவில்லை ஷெகர்கானி. கிட்டத்தட்ட சில விநாடிகள் இப்படியே ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியில் பியூர்டோரிகா வீராங்கனை, ஷெகர்கானியை கீழே வீழ்த்தி போட்டியை முடித்து வைத்தார்.
தோல்வியுற்று எழுந்த ஷெகர்கானி முதலில் தனது தலையை மூடியிருந்த துணி அவிழாமல் அப்படியே இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு மேடையிலிருந்து வேகமாக இறங்கி வந்தார். அவருடன் தந்தையும் உடன் வந்தார். தன்னை நோக்கி வந்த செய்தியாளர்களிடம் அதிகம் பேசவில்லை ஷெகர்கானி.

எனது மகளுடன் மோதியவர்கள் சாம்பியன்கள். எனது மகளுக்கு இதுதான் முதல் போட்டி. இந்த முறை தோற்றிருந்தாலும், எதிர்காலத்தில் எனது மகள் சாம்பியன் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தந்தை அலி.

ஷெகர்கானி, ஜூடோவில் ப்ளூ பெல்ட் மட்டுமே பெற்றவர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் மோதிய அத்தனை பேரும் பிளாக் பெல்ட் பெற்றவர்கள் ஆவர். இதனால் போட்டிக்காக பிளாக் பெல்ட் போட்டு கலந்து கொண்டார் ஷெகர்கானி.

82 விநாடிகளில் இந்த வித்தியாசமான போட்டி முடிவடைந்து விட்டாலும் சவூதி வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக சவூதி பெண்களிடையே இந்தப் போட்டி பெரும் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாக்குகளில் ஷெகர்கானியைப் பாராட்டியும், புகழ்ந்தும் செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஷெகர்கானிக்காகப் பெருமைப்படுகிறோம், வரலாறு படைத்து விட்டார் அவர் என்று அகமது அல் ஒம்ரான் என்ற சவூதி பத்திரிக்கையாளர் பிளாக்கில் எழுதியுள்ளார்.

சவூதியைச் சேர்ந்த அலா அல் மைசென் என்ற பெண் கூறுகையில், சவூதி பெண்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக திகழ்கிறார் ஷெகர்கானி. அவருக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment