Pages

Saturday 18 August 2012

Mosque & Muslim Women in France



பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்

இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிரேசில் நாடும் விதிவிலக்கல்ல. பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பிரேசில் சமூக
ம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பிரேசிலில் உள்ள இளம் பெண் ஃபாத்திமா கூறுகிறார்.

2000-ஆம் ஆண்டு சூழ்நிலைப் புள்ளி விபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில்85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.

ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிப்பதால் அவர்கள் மூலம் கூட அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் அன்றாட நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இப்படி இஸ்லாம் உலகின் அனைத்துப் பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளது.

தகவல் : tntj.net

No comments:

Post a Comment